மறுபடியும் சுகப்பிரம்மம்!
சுகப்பிரம்ம ரிஷிக்கு ஏன் அப்பெயர் வந்தது என்று ஒரு குறிப்பு புராணத்தில்
இருப்பதாகப் படித்தேன்.
வேதம் என்ற மரத்தில் அதனுடைய சாரமாகப் பழுத்தது ‘பாகவதம்’. கிளி
கொத்திய பழம் என்பது கனியின் இனிப்பைக் கூட்டுவது என சொல்வதுண்டு.
அதைப்போலவே, சுகர் பாகவதத்தை எடுத்துரைக்கும்போது அதன் சுவை
கூடுகிறது.
அதனாலேயே அவருக்கு சுகர் என்ற பெயர் வந்ததாம்.
அவர் மிகவும் அழகிய தோற்றம் உடையவர் நெறும் அந்தப் புராணத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது.
நான் சுகப்பிரம்மம் குறித்து முதலில் எழுதியிருப்பதற்கான திருத்தமாக இதை
எழுதுகிறேன்.
எப்படியிருந்தாலும், கிளி மூஞ்சியுடன் அவரை வரைவது சரியல்ல என்ற
எனது அபிப்பிராயம் சரிதான்.
No comments:
Post a Comment