THIS IS A BILINGUAL BLOGSPOT; YOUR FEEDBACK IS MOST WELCOME

து ஒரு இருமொழி வலைப்பூ ; உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

Wednesday, 24 December 2014

அவர்கள் குழந்தைகளா?



அவர்கள் குழந்தைகளா?




இன்று(நேற்றும்) மூத்த குடி மக்களை குழந்தைகள் போல் என்றும் இரண்டா வது குழந்தைப் பருவத்தில் இருக்கிறார்கள் என்றும் ’பெரிய மனிதத் தோரணை யில், பாதுகாவலர் போல் கூறுவது வாடிக்கையாகி விட்டது.


இன்று(நேற்றும்) மூத்த குடிமக்களை குழந்தைகள் போல் என்றும் இரண்டாவது குழந்தைப் பருவத்தில் இருக்கிறார்கள் என்றும் ’பெரிய மனிதத் தோரணை யில், பாதுகாவலர் போல் கூறுவது வாடிக்கையாகி விட்டது.

இப்படிப்பட்ட அப்பட்டமான பொய்யைத் திரும் பத் திரும்பக் கூறுவதில் உள்ள sub-text அல்லது hidden agenda மூத்தகுடிமக்களின் சுயத்தை, தனி அடையாள த்தை முற்றுமாக அழித்துவிடுவது; அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை, அவர்களுடைய பேச்சுரி மையை, யாரிடம் பேசலாம், கூடாது, யாரிடம் நட்பு பாராட்டலாம், கூடாது என்பதான தேர்வுரிமையை அவர்களுக்கு முற்றிலுமாக இல்லாமலாக்கிவிடுவது, தங்களுக்கென்று சுயமாய் கருத்துகளை அவர்கள் வைத்துக்கொள்ளவியலாமலாக்குவது, சில விஷயங் களில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை, சில கருத்துகள் குறித்து எதிர்வாதம் செய்ய அவர்களுக்கு அனுமதி மறுப்பது, மூத்த குடிமக்க ளை செயல்படவிடாமல் தடுப்பது, அவர்களை சுய மாய் சிந்திக்கக்கூட வழியில்லாமல் செய்துவிடுவது.

இப்படித்தானே நாம் நம்முடைய குழந்தைகளை நடத்துகிறோம்…..

நம்முடைய குழந்தைகள் ’நல்லவிதமாய் நடந்து கொள்ள’ வேண்டும் என்று விரும்புகிறோம்…

எதற்கெடுத்தாலும் குழந்தைகள் நம்மை சார்ந்திருப் பது  நமக்கு அளப்பரிய திருப்தியைத் தருகிறது. நம்மை முதன்மைக் கதாபாத்திரங்களாக உணரவைக் கிறது.

அப்படியேதான் நாம் வயதானவர்களும் நம்மை அண் டியிருப்பவர்களாய், நமக்குக் கட்டுப்பட்டவர் களாய் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். உண்மையில் அவர்கள் மூத்த குடிமக்கள்; வாக்கு ரிமை பெற்றவர்கள் அதே போல் சுயமாய் சிந்திக் கவும், செயல்படவும் உரிமையுடையவர்கள்.

வயது காரணமாய் அவர்களுக்கு சிற்சில உதவிகள் தேவைப்படுகிறது என்பதால் பதிலுக்கு அவர்கள் தங்களுடைய சுதந்திரத்தை முழுவதுமாக நம் கையில் கொடுத்துவிட்டு முற்ற முழுக்க சொல்லா லும் செயலாலும் தம்மைச் சார்ந்தே இயங்க வேண் டும் என்று இளையவர்கள் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியா யம்?

இளைய தலைமுறையினர் குறித்து மூத்த குடிமக்கள் சில மாற்றுக்கருத்துகளை, எதிர்க்கருத்துகளை முன் வைத்தால் உடனே 'அது அனாவசியமான கருத்து, தலைமுறை இடைவெளியின் காரணமாக ஏற்பட் டது' என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இளைய தலைமுறையினர் மூத்த குடிமக்களைப் பற்றி மிகப் பொதுப்படையான, மேம்போக்கான, மிக மிக எளி தான சில கருத்துகளைக் கூறும்போதும் அதற்கும் அதேவிதமான தர்க்கநியாயம் அல்லது காரணம் முன் வைக்கப்படுவது தானே நியாயம்?

வாழ்வின் வெவ்வேறு கட்டங்களைக் கடந்துவிட்டு முதுமைப்பருவத்தை எட்டியிருப்பவர்களைக் குழந் தைகள் என்பது எத்தனை குரூரமான அபத்தம்?

சமீபத்தில் முகநூலில் வழக்கமான ‘பெரியமனிதத் தோரணையில், பாதுகாவலர் குரலில் ’வயதானவர் கள் (பாவப்பட்டமுதியவர்கள்)அபத்தமான தொலை க் காட்சித் தொடர்நாடகங்களைப் பார்த்துப்பொழு தைக்  கழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கருத் துத் தெரிவித்திருந்தார்.

இளைய தலைமுறையினரையும் மூத்த குடிமக்களை யும் எதிரெதிர்நிலையில் வைத்துப் பார்க்கும் தேவை யற்ற வாதத்திற்குள் நாம் இழுபடலாகாது. என்றா லும் மேற்கண்ட கருத்துக்கு எதிர்வினையாக, பெரிய வர்கள் மட்டும்தான் அபத்தமான தொலைக்காட்சித் தொடர் நாடகங்களைப் பார்ப்பவர்களா என்று கேட் பதோடு, அறிவார்ந்த இளையதலைமுறையைச் சேர் ந்தவர்களாய் கருதப்படும் எத்தனையோ பேர் முகநூ லில் எத்தனையெத்தனையோ விதமாய் ‘போஸ்’ கொடுத்துக்கொண்டு அபத்தமான ‘கமெண்ட்டு' களை எழுதிக் குவிக்கிறார்கள்; அதுபோல் மூத்த குடிமக்கள் செய்வதில்லை’ என்று சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.


No comments:

Post a Comment