நானும் நீயும்
ஒரு
பேய்க்கூட்டத்துடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது.
ஒரு
நாள் அவைகள் மிகுந்த கவலையுடன் காணப்பட்டன.
“ஏன்?”
என்று விசாரித்தபோது_
அவைகளுக்குத்
தற்கொலை செய்துகொள்ள வழியில்லை என்பதுதான் காரணம் என்றன.
அதற்கான
தீர்வைக் கண்டறிய ஒரு கூட்டம் போடுவதாக இருந்தார்கள்.
’அங்கே தற்கொலையே தேவைப்படாத ஒரு சமுதாய அமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்று சொன்னார்கள்.
’அங்கே தற்கொலையே தேவைப்படாத ஒரு சமுதாய அமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்று சொன்னார்கள்.
கூட்டத்தில்
என்ன முடிவாயிற்று என்று விசாரித்தேன்.
பெயர்களை
ஒழித்துவிடுவது என்று தீர்மானித்தார்களாம்.
0
No comments:
Post a Comment